திருச்சியில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் சுப்பையா பாண்டியன் தலைமையில் 2034 வது இலவச மருத்துவ முகாம்
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், தமிழ்நாடு அக்குபஞ்சர் ரிசர்ச் கவுன்சில்,
திருச்சி வசந்தம் அரிமா சங்கம் மற்றும் முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் சித்தா, அக்குபஞ்சர் 2043வது இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா திருச்சி தென்னூர் பட்டாபிராமன் பிள்ளைத் தெருவில் நடைபெற்றது.
ஏழை எளிய மக்களுக்கு சேலை மற்றும் சித்தா, ஆயுர்வேதா மருந்துகள் மற்றும் அன்னதானத்தையும் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர்.கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கி வழங்கினார்.
முன்னதாக தேசிய ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் வரவேற்புரை யாற்றினார்.
இதில் அரிமா சங்க மாவட்ட தலைவர் வசந்தகுமார், மாநில சட்ட ஆலோசகர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சுருளிராஜன், பேராசிரியர் ரவிசேகர், டாக்டர்கள் ரவிக்குமார், சன்மதி, கல்பனா, சகுந்தலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தமிழ்நாடு அக்குபஞ்சர் கவுன்சில் டாக்டர்.விஜய் கார்த்திக் நன்றி கூறினார்.