Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பொன்மலை ரயில்வே பகுதியில் அடர்வனம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

0

பொன்மலை ரயில்வேயில்
மியாவாக்கி முறையில் அடர்வனம் அமைக்கும் திட்டம் 3வது இடம் தொடங்ப்பட்டது.


திருச்சி மாவட்டத்தில் பொன்மலை ரயில்வே பகுதியில் ‘மியாவாக்கி’ முறையிலான அடர்வனம் அமைக்கும் திட்டம் 3வது இடம் தொடங்கப்பட்டது.

குறைந்த பரப்பில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டுவைத்து அடர்ந்த குறுங்காடு உருவாக்கும் முறையை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாக்கி கண்டுபிடித்தார். இதனால், இந்த முறையிலான காடு வளர்ப்பு ‘மியாவாக்கி’ என்று அழைக்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் பொன்மலை ரயில்வே கழிவுநீர் சுத்தரிப்பு நிலையம் பகுதியில் பொன்மலை ரயில்வே முதன்மை பணிமனை மேலாளர் ஷியாமதர் ராம் அவர்கள் தலைமையில், பொன்மலை ரயில்வே உயர் அதிகாரிகள், மற்றும் பணிமனை மேலாளர்கள் முன்னிலையில் நடந்தது.

சென்னையிலிருந்து நேற்று காலை ரயில்வே பணிமணையை ஆய்வு செய்த
தென்னக ரயில்வே முதன்மை பணிமனை பொறியாளர் திரு.எஸ். சீனிவாஸ் அவர்கள் 1500 சதுர மீட்டர் அளவில் மரக்கன்று நட்டுவைத்துப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

புங்கை, பாதாம், ஈட்டி, வாகை, வேங்கை, மலைவேம்பு, நீர்மருது, தேக்கு, சரக்கொன்றை, எலுமிச்சை, தூங்குவாகை, கொய்யா, மருதாணி, பூவரசு, வன்னி, பலா, நாவல், மகிழம், பெருநெல்லி, செவ்வரளி, மாதுளை, கருவேப்பில்லை, அகத்தி, கல்யாண முருங்கை, பாக்கு, இயல்வாகை, இலுப்பை, நாகலிங்கம், மூங்கில், வில்வம் என நாட்டு மரங்கள், அதிவேகமாக வளரக்கூடிய மரங்கள், அடர்த்தியாக வளரக்கூடிய மரங்கள் என 23 வகையான 250 மரக்கன்றுகள் நட்டுவைக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.