கால்நடைகள் துன்புறுத்துவதை கண்காணிக்க பசு பாதுகாப்பு படை அமைப்பு. திருச்சியில் செண்டலங்கார செண்பக ஜீயர் பேட்டி.
கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது அது துன்புறத்தப்படாததை கண்காணிக்க பசு பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது – திருச்சியில் மன்னார்குடி ஜீயர் பேட்டி.
இறைச்சிக்காக கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது கால்நடைகள் துன்புறத்தப்படாமல் எடுத்து செல்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் அது குறித்து இன்று ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்கள சந்தித்த மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர்,
விலங்குகளை
பாதுகாக்கும் வகையில் ஏற்கனவே சட்டம் உள்ளது.தற்போது இறைச்சிக்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் பசு உள்ளிட்ட விலங்குகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது விதிமுறைகள் சரி வர பின்பற்றப்படுவதில்லை,அந்த கால்நடைகள் துன்புறுத்தப்படுகின்றன.
எனவே அது குறித்து ஏன் வழக்கு தொடுக்கப்பட்டது.அதை விசாரித்த உயர்நீதிமன்றம் கால்நடைகள் துன்புறுத்தப்படாமல் வாகனங்களில் செல்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது.
.இதனிடையே பசுக்கள் துன்புறத்தப்படாததை கண்காணிக்க பசு பாதுகாப்பு படை என்கிற அமைப்பை உருவாக்கி உள்ளோம்.அந்த அமைப்பினர் தமிழகம் முழுவதும் வாகனங்களில் பசுக்களை எடுத்து செல்வதை கண்காணிப்பார்கள்.அப்போது உரிய விதி மீறல்கள் பின்பற்றப்படவில்லையென்றால் அது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
இந்த அமைப்பு சட்டத்தை கையில் எடுக்காது அதே நேரத்தில் விதி முறைகளை மீறி பசுக்கள் துன்புறுத்தப்படுவதை கண்காணித்து அதிகாரிகள் அது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.
இந்த அமைப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாது.வட மாநிலங்களில் கோ ரக்ஷன் அமைப்பு பசுக்களை வாகனங்களில் கொண்டு செல்பவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என கூறுவது தவறு,அது போன்ற சம்பவங்கள் வட மாநிலங்களில் நடைபெறுவதில்லை.
சில தேச விரோத சக்திகள் அது போன்ற சம்பவங்கள் நடப்பதாக பொய்யை பரப்புகிறார்கள் என செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் கூறினார்.