திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த இளம்பெண் அவரது தாயார் கண்ணீருடன் தரையில் அமர்ந்து தர்ணா
திருச்சி லால்குடி முள்ளாள் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சுபாஷினி.
இவரது தந்தை ஜெயபாலன் அண்ணன் கணேஷ், ஆனந்த் ஆகிய 3 பேரும் ஒவ்வொரு ஆண்டுகள் இடைவெளி மர்மமான முறையில் இறந்தனர். இயற்கையான முறையில் இறந்தனர் என்று எண்ணி இதற்கு இவர்கள் பின்வரும் சுப்ரமணி அவரது மகன்கள் சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ் ஆகிய 4 பேரும் சேர்ந்து எங்களது சொத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்து உள்ளனர்.
சுப்ரமணி எனது வீட்டுக்கு வருபவர்களை சாதிப் பெயரைச் திட்டியதாக என் மீது பொய்யான P.C.R. வழக்கு புகார் செய்திருக்கிறார், வழக்குப்பதிவு செய்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும் எங்களது விவசாய நிலங்களில் தனக்கு உரிமை உண்டு என நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து உள்ளார்.
விவாகரத்து ஆன எனக்கு மறுமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வரும் வேளையில், பெண் பார்க்க வருபவர்களும் நான் நடத்தை கெட்டவள் எனக் கூறி திருமணத்திற்கு இடையூறு செய்து வருகிறார்.
பொங்கலன்று அதிகாலை 3 மணியளவில் எனது மகன் ரமேஷுக்கு குழந்தை இல்லை எனவே எனது கடைசி மகனுக்கு என் வப்பாட்டியாக இருந்து கொள். இதற்கு நீ சம்மதித்தால் வழக்குகளை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.
இல்லை என்றால் உனக்கு திருமணம் நடக்காது. உனது மரணமும் உன் தந்தை, அண்ணன்கள் போன்று முடிந்து விடும் என மிரட்டிச் சென்றார்.
இந்த சம்பவங்கள் குறித்து காவல்துறை டிஜிபி மற்றும் முதல்வர் வரை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்றார். சிறிது நேரம் கழித்து காவல் துறையினர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திப்பதற்கு அழைத்துச் சென்றனர்.
உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இளம் பெண்ணும், வயதான தாயும் கண்ணீருடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டது கலெக்டர் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.