Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி காவல்துறை ஆணையரிடம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தினர் மனு .

0

*திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தினர் மனு !*

திருச்சி , மாநகர காவல் ஆணையரிடம் நான்கு அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் தலைமையில் மனு கொடுக்க பட்டது இவ்மனுவில் கூறியிருப்பதாவது.

1) திருச்சி மாவட்டத்தில் மக்கள் அதிகமாக நடமாட்டம் உள்ள இடங்களில் போக்குவரத்து சிக்கனல்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரபட வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

2) காவல் நிலையங்களுக்கு புகார் செய்ய வரும் பொதுமக்கள் மற்றவர்கள் உதவியை நாடிவர வேண்டிய நிலை உள்ளது எனவே பொதுமக்கள் தங்களது புகார்களை ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம் என்பதை மக்களிடத்தில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை முன்வர வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

3) மேலும் சாலைகளில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டுவருகின்றன. எனலே விபத்து நடக்கும் பகுதிகளில் இரும்பு தடுப்பு வேலி அமைத்து விபத்துக்களை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

4) சாலை ஓரங்களில் மின்கம்பத்தில் விளக்குகள் இல்லாததால் அதனை சாதகமாக பயன் படுத்தி இரவு நேரங்களில் தொடர்ந்து வழிபறி கொள்ளைகள் அதிகரித்து வருகிறது .எனவே இதுபோன்ற குற்றச்செயல் நடைபெறாமல் இருக்க காவல்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் குற்ற செயலில் ஈடுபடுவோர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் . என்று அவ்மனுவில் கூறியுள்ளார்.மேலும் இந்த நிகழ்வில் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டர்.

Leave A Reply

Your email address will not be published.