Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 25 அதிகரிப்பு

https://trichyxpress.com/
0

வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 25 அதிகரிப்பு

https://trichyxpress.com/
https://trichyxpress.com/

மாதந்தோறும் 1ம் தேதி மாற்றம் பெறும் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை, நடப்பு மாதம் 1ம் தேதி உயர்த்தப்படாமல் நேற்று (4ம் தேதி) திடீரென 25 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் 735, சேலத்தில் 753 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. கொரோனா பரவலின் காரணமாக கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்தபோது, விலையை குறைத்தனர். ஜூன், ஜூலை மாதத்தில் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரிக்கவும், காஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்தன. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதத்தில் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், டிசம்பர் மாதத்தில் 1ம் தேதியும், 15ம் தேதியும் தலா 50 வீதம் 100 விலையேற்றம் செய்யப்பட்டது. கடந்த மாதம் (ஜனவரி) வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மாற்றவில்லை.
இந்நிலையில், நடப்பு மாதத்திற்கான (பிப்ரவரி) புதிய விலை 1ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது. அதில், 19 கிலோ எடைகொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை 191 அதிகரித்தனர். இதனால், இதன்விலை டெல்லியில் 1,533 ஆகவும், கொல்கத்தாவில் 1,598.50 ஆகவும், மும்பையில் 1,482.50 ஆகவும், சென்னையில் 1,649 ஆகவும், சேலத்தில் 1,610 ஆகவும் இருந்தது. இந்நிலையில், நேற்று திடீரென நாடு முழுவதும் 14.2 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலையை 25 அதிகரித்து எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால், சென்னையில் 710க்கு விற்கப்பட்ட மானியமில்லா சிலிண்டர், 25 அதிகரித்து 735 ஆகவும், சேலத்தில் 728ல் இருந்து 753 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

https://trichyxpress.com/

Leave A Reply

Your email address will not be published.