திருச்சியில் திமுக வழக்கறிஞர் பிரிவு அலுவலகம் சிறப்பு.
திருச்சி மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அலுவலகம் திறப்பு விழா முதன்மைச் செயலாளர் கே என்நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் ஆர் எஸ் பாரதி கூறுகையில்
தேர்தல் ஆணையம் தொடர்ந்து பல புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது.
தி.மு.க விற்கு வரும் தேர்தல் சவாலாக இல்லை.பல தேர்தலை சந்தித்தவர்களும் சட்டப்பூர்வமான அறிவுரைகள் தேவைப்படுகிறது எனவே வழக்கறிஞர்களை வைத்து பல முன் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறோம்.
கமல் தி.மு.க கூட்டணியில் இணைவரா என்பது குறித்து எங்களுக்கு ஜோசியம் தெரியாது.
தி.மு.க ஏற்கனவே ஆட்சியில் இருந்த போதும் முரண்பட்ட கொள்கை கொண்ட கட்சியினர் மத்தியில் ஆட்சியில் இருந்துள்ளனர்,
இருந்தபோதும் நாங்கள் சிறந்த ஆட்சியை தந்துள்ளோம். வரும் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தாலும் சிறந்த முறையில் ஆட்சி செய்வோம் மத்தியில் இருப்பவர்களோடு கூட்டாட்சி செய்ய அறிவு கூர்மை இருந்தால் போதும்.
ஸ்டாலின் முதல்வர் ஆனால் தான் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை சாத்தியமாகும்,
தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு அவரை விடுதலை செய்யும் தைரியம் இல்லை.
பிப்ரவரி 28 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்க உள்ளார்கள்.அது குறித்து நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் 20 நாட்களே உள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், இலக்கிய அணி துணை செயலாளர் ஸ்ரீதர், திமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் பாஸ்கர், ஓம்பிரகாஷ், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..