Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

108 ஆம்புலன்ஸ் சேவை குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்தி பேட்டி.

0

 

கடந்தாண்டில் 22521 பேர் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தினர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 40 செயல்பட்டு வருகின்றது. அவசர அழைப்பு பெறப்பட்டு 8 முதல் 13 நிமிடங்களில் நகர்புரம் மற்றும் கிராம புறங்களுக்கு சேவை அளிக்கும் வகையில் வாகனங்களில் GPS கருவி பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மொத்தம் 42862 நபர்கள் 108 சேவையை பயன்படுத்தியுள்ளனர் இதில் 3860 பேர் கருவுற்ற தாய்மார்களாகும். 5969 பேர் சாலை விபத்திற்காக உயயோகித்துள்ளனர்.

குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் ஆம்புலன்ஸில் மருத்துவமணைக்கு செல்லும் வழியில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டு 63 குழந்தைகள் ஆம்புலன்ஸில் வந்துள்ளனர். கொரானா தடுப்பு நடவடிக்கையின் போது 5222 பேர் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர்

இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வெண்டிலேட்டர், ஈசிஜி மானிட்டர் போன்ற அதிநவீன கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ் திருச்சிராப்பள்ளி மருத்துவக்கல்லூரி மற்றும் ஸ்ரீரங்கம் துறையூர் மனப்பாறை அரசு மருத்துவமணையில் நிறுத்தப்பட்டுள்ளது .

பச்சிளம் குழந்தைகளான ஆம்புலன்ஸ் திருச்சிராப்பள்ளி மருத்துவக்கல்லூரி மற்றும் மனப்பாறை அரசு மருத்துவமணையில் இன்குபேட்டர் மற்றும் வெண்டிலேட்டர் வசதிகளுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சராசரியாக மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் காப்பற்றப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்தி கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.