ஆபரேஷன் ஸ்மைல்” திருச்சியில் 17 சிறுவர், சிறுமியர் மீட்பு..
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவின் பேரில் தமிழகத்தில்
“ஆபரேசன் ஸ்மைல்” என்ற திட்டத்தின் மூலம் குழந்தை தொழிலாளர், காணாமல் போன குழந்தைகள்,பிச்சை எடுக்கும் குழந்தைகள், சாலையோர குழந்தைகள் ஆகியோரை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அதிரடி திட்டம் பிப்ரவரி 1ஆம் தேதி இன்று துவங்கி வருகிற 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று தொடங்கிய இந்த திட்டத்தின் கீழ், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சிந்துநதி தலைமையில் கொண்ட போலீசார் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வேலைப் பார்த்துக் கொண்டிருந்த 7 குழந்தை தொழிலாளர்கள் திருச்சி மாவட்ட போலீசாரால் மீட்கப்பட்டனர். இதனை தொடர்ந்து சமயபுரம் மற்றும் நம்பர் 1 டோல்கேட்
பகுதிகளில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்டோர் பாலாஜி நகர் பகுதியில் டென்ட் கொட்டாய் அமைத்து தங்கி வருகின்றனர். இதில் சிலர் கைக்குழந்தைகளை காட்டி பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வந்தது தொிய வந்தது. இதனை தொடர்ந்து குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் தாய் உள்ளிட்ட 4 குழந்தைகள் மற்றும் 4 சிறுமிகள் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 17 சிறுவர்-சிறுமியர் மீட்கப்பட்டு திருச்சி மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த ஆபரேஷன் ஸ்மைல் திட்டமானது இன்று தொடங்கி 15ம் தேதி வரை தொடரும் என்று மாவட்ட போலீசார் தொிவித்து உள்ளனர்.