திருச்சியில் இந்தியன்ஆயில் நிறுவனம் நடத்தும் சக்ஷம் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.
சக்ஷம் என்பது PCRA எனப்படுகிற பெட்ரோலியம் சேமிப்பு ஆராய்ச்சி அமைப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் வழிகாட்டுதலில், மக்களுக்கு ஆற்றல் சேமிப்பின் இன்றியமையாமை குறித்து புரிந்துணர்வு ஏற்படுவதற்காக நடத்தும் ஒரு மாத கால பரப்புரையாகும்.
இந்த ஆண்டு, இந்த பரப்புரை, ஜனவரி 16 முதல் பிப்ரவரி 15, 2021 வரை
பசுமை மற்றும் தூய்மையான ஆற்றல்” என்கிற கருப்பொருளில் நடத்தப்பட்டு வருகிறது.
சக்ஷம் 2021 பரப்புரையின் ஒரு பகுதியாக,
இந்தியன்ஆயில் நிறுவனம், திருச்சியில் சைக்கிள் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சைக்கிள் பேரணி, ஆர்டிஓ மற்றும் சப் டிவிஷனல் மேஜிஸ்ட்ரேட் விசுவநாதன் அவர்களால் பாபு நாகேந்திரா துணை பொது மேலாளர் இந்தியன் ஆயில், ராஜேஷ் முதன்மை பகுதி மேலாளர் இந்தியன் ஆயில், ஜெயலட்சுமி மேலாளர் லூப்ஸ் டெக்னிக்கல் சேல்ஸ் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
சுமார் 200 (குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை) என ஆர்வலர்கள் ஆர்வத்துடன் இந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.
குடிமக்கள் இடையே எரிபொருள் சிக்கனம் பற்றியும் செயல்திறன் மிக்க வகையில் ஆற்றல் பயன்படுத்துதல் பற்றியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடத்தப்படுகிறது. அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல சைக்கிள் பயன்பாட்டை வலியுறுத்துவதும் நோக்கமாகும். அதனால், பசுமையான சூழல் உருவாக ஏதுவாகும் என்பதோடு உடல்நலம் மேம்படும்.
இந்த பிரச்சாரத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தூய்மையான எரிசக்தியை நோக்கி இந்தியாவை நகர்த்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஏழு விஷயங்கள் குறித்தும் பிரச்சாரத்தின் போது எடுத்துரைக்கப்படும்.
இந்த ஆண்டு சக்ஷம் பரப்புரை நோக்கங்கள் :
1.
கேஸ் அடிப்படையிலான பொருளாதாரம்
2.
பூமியின் கீழ் கிடைக்கும் எரிபொருள்களைத் தூய்மையான முறையில் உபயோகித்தல்
3
பயோ – எரிபொருள்களில் தனிச்சிறப்பு கவனம்
4.
2030-ல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 450 GW ஆக ஆக்குதல்
5.
கரியமில வாயு சார்ந்த போக்குவரத்தை நீக்கும் முன்முயற்சி
6.
ஹைட்ரஜன் போன்ற எரிபொருள்களுக்கு முக்கியத்துவம் அளித்தல்,
7.
ஆற்றல் சார்ந்த சிஸ்டம்களில் டிஜிட்டல் நவீனத்துவம்
PCRA அமைப்பும் இந்தியன்ஆயில் உள்ளிட்ட ஆயில் & கேஸ் நிறுவனங்கள், இந்த ஒரு மாத பரப்புரை காலத்தில் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்வுகளை மேக்கொள்ளும். ‘சக்ஷம் சைக்கிள் நாள்’, சைக்கிள் பேரணி, வர்த்தக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கான பயிலரங்கம், இல்லத்தரசிகள் / சமையல் கலைஞர்களுக்காக எளிதான எரிபொருள் சிக்கன நடைமுறை குறித்த கருத்தரங்கு ஆகியவை நடத்தப்படும்.
(R சிதம்பரம்)
பொது மேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்)
இந்தியன்ஆயில்.