திருச்சி கேகே நகர் அருகில் உள்ள கோவர்த்தனன் தோட்டம் 3வது குறுக்கு தெரு வழியாக தான் TSN அவென்யூ, Alpha school செல்லவேண்டும்.
பள்ளி நேரத்தில் ஏறக்குறைய 1000 வாகனங்களும் மற்ற நேரத்தில் குறைந்தது 100 வாகனங்கள் செல்லும் இந்த சாலை தற்போது மழையினால் சேதமடைந்து
பொதுமக்கள் நடந்து செல்வதற்கே முடியாத நிலையில் உள்ளது.
மழை முடிந்துவிட்டபோதிலும் சேறும் சகதியுமாக மோசமான நிலையில் உள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை .
மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.