வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீடு கேட்டு பாமக ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கங்கள் இணைந்து வன்னியர்களுக்கான 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரி 6ம் கட்ட மக்கள் திரள் போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பேரணியாக கையில் கொடிகள் ஏந்தி சென்று கோஷங்கள் எழுப்பியவாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் பாமகவினர் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் மாவட்ட செயலாளர் திலிப் பத்திரிக்கையாளர்கள் பேட்டி அளிக்கையில்…
கடந்த 40 ஆண்டுகளாக வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டை வழங்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். ஆளும் அதிமுக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் ஆதரவோடு தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருகிறார். எங்கள் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் தமிழகம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டங்கள் இருக்கும் என தெரிவித்தார்.
இந்த போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் திலிப் தலைமை தாங்கிட கிழக்கு மாநில துணை பொதுச்செயலாளர் பிரிண்ஸ் மற்றும் மேற்கு மாநில துணை பொதுச்செயலாளர் லட்சுமண குமார்,மாநில துணைத் தலைவர்கள் உமாநாத்,முசிறி மனோகர்,சிறுபான்மை பிரிவு தலைவர் ரஜாக் ஷர்புதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிழக்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீரங்கம் சரவணன் மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாநிலத் துணைத் தலைவர் மனோகரன்,மாநிலத் துணைத் தலைவர் குமரேசன்,செய்தித் தொடர்பாளர் வினோத் குமார் உள்பட பாமகவினர் திரளாக கலந்து கொண்டனர்