Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு.

0

https://trichyxpress.com/

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி இன்று (29.01.2021) எடுக்கப்பட்டது.

இந்திய விடுதலை போராட்டத்திற்கு பாடுபட்ட தியாகிகள் நினைவு கூறும் வகையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று 29.01.2021 காலை 11.00க்கு சுதந்திரபோராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, பின்னர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் வாசிக்க அதனைதொடர்ந்து மாநகராட்சி அலுவலாகள் மற்றும் பணியாளர்கள் பின்தொடர்ந்து கூறி தீண்டாமை எதிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் செயற் பொறியாளர்கள் பி. சிவபாதம், உதவி ஆணையர்கள் எஸ்.திருஞானம், திரு.ச.நா.சண்முகம், சி.பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.