Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன் – 29.01.2021

0

இன்றைய ராசிப்பலன் – 29.01.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு இன்று உங்களுக்கு வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும்.

அசையும் அசையா சொத்து ரீதியாக வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது வேண்டும். சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் இருக்கும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி அமையும். பயணங்களால் அனுகூலம் கிடைக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி இருப்பார்கள் . குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி கிடைக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியுடன் முடிக்க முடியும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுபசெலவுகள் இருக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு இன்று உறவினர்கள் மற்றும் பிள்ளைகள் வழியில் மன சங்கடங்கள் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல், டென்ஷன் இருக்கும் . தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல லாபத்தை கூடும். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு இன்று வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெற உண்டாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு இருக்கும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும் .

துலாம்

உங்களின் ராசிக்கு இன்று குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கடன் பிரச்சினைகள் குறைவதுடன் தேவைகளும் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உற்றார் உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து குவியும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் வேலைபளு உண்டாகும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

தனுசு

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமத பலனே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது உத்தமம். சுபகாரியங்களை தவிர்க்க வேண்டும்.

மகரம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப பதவி உயர்வுகள் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பயணங்களால் வெளிவட்டார நட்பு கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாரட்டப்படும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு வந்து குவியும்.

மீனம்

உங்களின் ராசிக்கு இன்று தொழில் ரீதியான பொருளாதார நெருக்கடிகளால் மனநிம்மதி குறையக்கூடும். உறவினர்களால் வீண் விரயங்கள் இருக்கும். எதிலும் சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் விலக உணவு விஷயத்தில் கவனம் வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.