Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி NITயில் அதிநவீன வேவ் ஃப்ளும் அறிமுகம்.

0

திருச்சி என்.ஐ.டியில் சிவில் இன்ஜினியரிங் துறையில் அதிநவீன ‘வேவ் ஃப்‌ளூம்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள, சிவில் இன்ஜினியரிங் துறையில் அதிநவீன ‘வேவ் ஃப்‌ளூம்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியானது, ஐ.ஐ.டி மெட்ராஸுக்கு அடுத்ததாக திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் மட்டுமே இருக்கிறது என்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

கடந்த 26 ஜனவரி 2021 அன்று என்ஐடி-டி இயக்குனர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ் அவர்களால் இது துவங்கி வைக்கப்பட்டது.

டாக்டர் எம். உமாபதி, பதிவாளர்(i/C), டாக்டர் ஜி. சுவாமிநாதன், தலைமை சிவில் இன்ஜினியரிங் டாக்டர். ஆர். மஞ்சுளா, திட்ட செயற்பாட்டாளர், சிவில் இன்ஜினியரிங் துறை ஆகியோர் கலந்து கொண்டனர்.

என்ஐடி-டி இயக்குனர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ்க்கு பல்வேறு வகையான அலை உருவாக்கம் செய்துகாட்டப்பட்டது.

வேவ் ஃப்‌ளூம்’ வசதி (30 மீ நீளம், 1 மீ அகலம் மற்றும் 1.8 மீ உயரம்) ரூ. 69 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.

அலை ஃப்ளூம் ஆய்வகத்தில் ரெகுலர், நான் லீனியர், க்னாய்டல், சாலிடரி மற்றும் ஃபோகசிங்க் அலைகளை உருவகப்படுத்த முடியும். ஆராய்ச்சி மாணாக்கர்களுடன், அனைத்து யுஜி மற்றும் பிஜி மாணவர்களும் தனித்துவமான இந்த சோதனை வசதியை உபயோகப்படுத்தலாம்.

மிக முக்கியமாக, இந்த புதிய வசதி கடல் மற்றும் கடலோர பொறியியல் துறையில் உலக அளவில் முன்னணி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு உதவும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.