அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் சசிகலா பெங்களூர் சிறையிலிருந்து இன்று விடுதலையானதை தொடர்ந்து திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஜெ.அறிவுறுத்தலின்படி தில்லைநகர் மாவட்ட அலுவலகம் அருகில் வாணவெடிக்கை வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சிகளில் கழக அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான்,
அவைத்தலைவர் ராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, சேட்டு, பகுதி செயலாளர்கள் தன்சிங், என்ஜீனியர் ரமேஷ், கண்ணன், கல்நாயக் சதீஷ்குமார், நாகநாதர் சிவக்குமார், வக்கீல்கள் மணிவண்ணன், தினேஷ்பாபு, வேளாங்கண்ணி, கோபி செழியன், ஆர்.டி.எம்.ரவி, வி.எல்.சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரேம்குமார், அம்மா பேரவை தில்லைநகர் பகுதி செயலாளர் சாலமன், ரோஜர், ஜெகதீசன், உமாபதி, சக்திவேல், கே.கே.எம்.சதீஷ்குமார், ஒத்தக்கடை சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.