Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன் – 26.01.2021

0

இன்றைய ராசிப்பலன் – 26.01.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு இன்று பிள்ளைகளால் பெருமை வந்து கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று தீரும். தெய்வ வழிபாடு நல்லது.

மிதுனம்

உங்களின் ராசிக்கு இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து அமையும். சகோதர சகோதரிகளுடன் இருந்த மன சங்கடங்கள் விலகி ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் அனைத்தும் குறையும்.

கடகம்

உங்களின் ராசிக்கு இன்று உடல் நிலையில் சிறு உபாதைகள் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்க வேண்டும். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு இன்று எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்பட வேண்டும். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி கிடைக்கும். வருமானம் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் இருக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கூடும் .

துலாம்

உங்களின் ராசிக்கு இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் வெளிப்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் தீரும் .

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் சற்று கவனத்துடன் இருப்பது வேண்டும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது கொடுக்கும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது . பயணங்களில் கவனம் தேவை.

தனுசு

உங்களின் ராசிக்கு இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடல் நிலை சீராகும். பெண்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டாகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு இன்று பொருளாதார நிலை சீராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக அமையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு இன்று உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க கூடும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி செயல்படுவார்கள். திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலமான பலன்கள் கிட்டும். பொருளாதார நிலை ஓரளவு சீராகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். நண்பர்களால் மனநிம்மதி நீங்கும் . திருமண முயற்சிகளில் தடைகள் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்க முடியும். பெரியவர்களின் ஆதரவு மனதிற்கு நம்பிக்கையை அளிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.