யானை மீது எரியும் டயரை வீசிய கொடூர நபர்கள் : இரண்டு பேர் கைது.
மசினகுடியில் உயிரிழந்த யானை மீது தீப்பற்றிய காட்சி வெளியானது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மசினகுடியில், காது மடல் கிழிந்து உடல்நலம் குன்றி உயிரிழந்த யானை மீது தீ வைத்த கொடூர காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக, பலத்த காயத்துடன், மசினகுடி பகுதியில் சுற்றிவந்த 40 வயதுள்ள காட்டு யானை, கடந்த மாதம் 28ஆம் தேதி கும்கி யானைகளின் உதவியுடன் பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
காதில் ஏற்பட்ட தீ காயம் நுரையீரல் வரை பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது அந்த யானைஉயிர் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த யானை குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வந்த போது சிலர், டயரில் தீ வைத்து, யானை மீது வீசி விரட்டினர். தீயுடன் டயரை வீசிய அந்த இரண்டு நபர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்
தீப்பிடித்து உருகிய நிலையில் இருந்த டயர், இடது காது பகுதியில் தாக்கி யானை காது மடல் முழுவதும் தீப்பற்றி எரிநத, பதைபதைக்கும் | சம்பவத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.