எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் குறித்து மு.பரஞ்சோதி அறிக்கை.
தமிழக முன்னாள் முதலமைச்சர்
எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்,
முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அறிக்கை.
நாளை 24.1.2021ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முன்னாள் முதலமைச்சர், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104-வது பிறந்த நாள்விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்வரும் கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க,
தமிழக முன்னாள் முதலமைச்சர், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாளையொட்டி, நாளை 24.1.2021-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, அல்லித்துறை எம்.ஜி.ஆர் திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இப்பொதுக்கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன், கழக அமைப்புச்செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான எஸ்.வளர்மதி, தலைமைக் கழகப்பேச்சாளர் திரு.நடிகர் எம்.விஜய்கணேஷ், தலைமை கழக பேச்சாளர்கள் துகிலி நல்லுசாமி, தஞ்சை மதியழகன், முசிறி சட்டமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி பரமேஸ்வரிமுருகன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
மேலும்
நாளை மறுநாள் 25.1.2021 (திங்கள் கிழமை) இந்தி மொழித்திணிப்பை எதிர்த்து மொழிப்போராட்டத்தில் அன்னைத்தமிழுக்காக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் மண்ணச்சநல்லூர் எம்.ஜி.ஆர் திடலில் (பெட்ரோல் பங்க் அருகில்) நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு மாணவரணி மாவட்டச் செயலாளர் டி.அறிவழகன் தலைமை வகிக்கிறார்.
கழக அமைப்புச்செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான எஸ்.வளர்மதி, கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க.பொன்னுசாமி,
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி,
தலைமைக் கழக பேச்சாளர்கள் வடுகப்பட்டி கே.சுந்தரபாண்டியன், கரூர் ஏ.சுந்தரம், முசிறி சட்டமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
மேற்கண்ட கூட்டங்களில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள். முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, ஊராட்சி, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் எம்.ஜி.ஆர் மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஒட்டுநர்கள் அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்பப் பிரிவு, கலைப்பிரிவு, கூட்டுறவு சங்க, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள், தொண்டர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.