தமிழகத்தில் தொடர்ந்து 3 – வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைய மக்கள் மன்றம் தீர்மானித்து விட்டது என்று அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் கூறினார் .
அ.தி.மு.க. பொதுக்கூட்டம் திருச்சி உறையூர் குறத்தெரு வில் நேற்று முன்தினம் இரவு எம்.ஜி.ஆர்.பிறந்த தின விழா அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் , தமிழகசுற்றுலாத்துறை அமைச்சரருமான வெல்லமண்டி நடராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார் .
அப்போது அவர் பேசியதாவது :
எம்.ஜி.ஆர் . தொடங்கிய அ.தி.மு.க. இயக்கத்தை உயிருள்ள நாள் வரை கருணாநிதியால் வெற்றி கொள்ள முடியவில்லை . அண்ணா வால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் கருணாநிதியால் குடும்ப சொத்தாக மாறிவிட்டது . மக்கள் மன்றம் தீர்மானம்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா இந்த இயக்கத்தை சிறப்பாக நடத்தி வந்தார் . எம்.ஜி.ஆர் 7 லட்சம் தொண்டர்களுடன் விட்டு சென்ற இயக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்கள் ஆக மாற்றிய பெருமை ஜெயலலிதாவையே சாரும் .
இப்போது அவரது வழியில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார் . இந்தியாவில் தமிழகம் தவிர வேறு எங்கும் பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படவில்லை .
தமிழகத்தில் 3 – வது முறையாக அ.தி.மு.க. ஆட்சிதான் அமைய வேண்டும் என்று மக்கள் மன்றம் தீர்மானித்து விட்டது . இது ஒரு வரலாற்று சாதனையாக அமையப்போகிறது.
நாம் மூன்றாவது முறையாக வெற்றி பெற் றால் தி.மு.க. என்ற கட்சி தமிழகத்தில் அழிந்துவிடும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசினார் .
எங்களை யாரும் மிரட்ட முடியாது கூட்டத்தில் முன்னாள்அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேசியதாவது :
எம்.ஜி.ஆருக்கும் , திருச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு . இது நமது கட்சியி லேயே கூட பலருக்கு தெரி யாது . தமிழகத்தில் கூட்டணி கள் பற்றி பரபரப்பாக பேசப் பட்டு வருகிறது .பல கட்சிகளுக்கு அங்கீகா ரம் கொடுத்ததே தமிழகத்தில் அ.தி.மு.க. தான். பல கட்சிகள் அ.தி.மு.க. என்ற இயக்கத்தின் தோளில் இருந்து கொண்டு அங்கீகாரம் பெற்றன . அப்படி உள்ள கட்சிகள் தோளில் இருந்து கொண்டு திருவிழாவை பார்த்தோமா ? திருப்தி அடைந்தோமா ? என்ற உணர்வோடு இறங்கி செல்ல வேண்டுமே தவிர தோளில் இருந்து கொண்டு காதை கடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்
அ.தி.மு.க.வை ‘ யாரும் மிரட்ட முடியாது. ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் .
நமக்கு கூட்டணி பலம் தேவையில்லை .ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றுமையாக உழைத்தாலே போதும் மீண்டும் கழக ஆட்சி அமையும் . இவ்வாறு அவர் பேசினார் .
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், நல்லுசாமி, இணைச் செயலாளர் ஜாக்குலின், துணைச் செயலாளர் வனிதா, பொருளாளர் மனோகரன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ராஜ்குமார், பேரவை செயலாளர் வி.பத்மநாதன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், மகளிரணி தமிழரசி சுப்பையா, பாசறை செயலாளர் இலியாஸ், கலைப்பிரிவு செயலாளர் அழகரசன் விஜய், வர்த்தகர் பிரிவு துணைச்செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன், மீனவர் அணி அப்பாஸ், ராமச்சந்திரன், தாயார் சீனிவாசன், கருடா நல்லேந்திரன், பகுதி செயலாளர்கள் கருமண்டபம் ஞானசேகர், அன்பழகன், சுரேஷ் குப்தா, நாகநாதர் பாண்டி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, ஜவஹர்லால் நேரு, பொதுக்குழு உறுப்பினர் டாக்டர்.சுப்பையா,மல்லிகா செல்வராஜ்,வக்கீல்கள் கங்கைச் செல்வன், சுரேஷ், ராஜா, வரகனேரி சசிக்குமார், தர்கா காஜா, அஸ்வினி மோகன், நவசக்தி சண்முகம், லயன் கார்த்தி கேயன், அ செந்தில்நாதன், வெல்கம் மாணிக்கம், பொன். அகிலாண்டம், சந்திரன், கட்பீஸ் ரமேஷ், பாபு, அக்தர் பெருமாள், வக்கீல் ஜெயஸ்ரீ, ராஜலட்சுமி, செந்தண்ணீர்புரம் கணேசன், கே.சி.மோகன், சந்திரசேகர், பிரகதீஷ், சந்துரு, ஆட்டோ ரஜினி, பிரதீப், விவசாய அணி மாவட்ட பொருளாளர் விஷ்வா ,ரமணிலால், என்ஜீனியர் சிங்காரவேலு ராஜா, ஒத்தக்கடை மகேந்திரன், எம்.ஜே.பி.வெஸ்லி, குரு மூர்த்தி, ஆனந்த்பாபு, புத்தூர் சதீஷ் குமார், சந்திரசேகர், அப்பாக்குட்டி, பாலசுப்பிரமணியன், சுப்புரா, ரவி, பிச்சைமணி, முருகன், முத்தையா, பன்னீர்செல்வம், ராஜாளி சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.