திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 15வது வார்டு தாராநல்லூர் பகுதியில்
மெகா தூய்மைபணி
சுற்றுலாத்துறை அமைச்சர் என். வெல்லமண்டி நடராஜன் துவக்கிவைத்தார்.
திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் குப்பைகள் தேங்கியுள்ள இடங்களை தேர்வு செய்யப்பட்டு மெகா தூய்மை பணி மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியம் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் என். வெல்லமண்டி நடராஜன் இன்று 20.01.2021 15வது, வார்டு தாராநல்லூர் கீரைக்கொள்ளை பஜார் பகுதியில் 200 தூய்மைபணியாளர்களை கொண்டு சாக்கடை அடைப்பு தூர் வாருதல், குப்பைகளை அப்புறப்படுத்துதல் , பிளாஸ்டிக் பயன்படுத்தாமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் , குப்பைகளை தரம் பிரித்து தருவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மழைநீர்வடிகால் மண் தூர்வாருதல், டெங்கு புழு தடுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ள துவக்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் அதிக அளவு குப்பைகள் தேங்கியுள்ள இடங்களை தேர்வு செய்யப்பட்டு மெகா துப்புரவு பணி மேற்கொள்ள அதன்படி நான்கு கோட்ட உதவி ஆணையர்கள் முன்னிலையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களை ஒருகிணைத்து மெகா தூய்மை பணி சாக்கடை அடைப்பு தூர் வாருதல், குப்பைகளை அப்புறப்படுத்துதல் , பிளாஸ்டிக் பயன்படுத்தாமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் , குப்பைகளை தரம் பிரித்து தருவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மழைநீர்வடிகால் மண் தூர்வாருதல், டெங்கு கொசு புழு தடுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு குப்பை இல்லா மாநகரமாக உருவாக்கப்படும்.

மாநகராட்சி சில இடங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு ஒவ்வொரு வார்டிலும் 25 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மெகா தூய்மை பணிகளை 65 வார்டுகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள
சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஒருங்கினைத்து தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட உள்ளன. மாநகர மக்கள் நகரத்தை தூய்மையாக பராமரித்திட மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறும்,
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் டீ கப் மற்றும் தண்ணீர் குடிப்பதற்கான கப்கள் மற்றும் சிறிய அளவிலாக கேரி பைகள் சாக்கடைநீர் வடிகால்களையும், மழைநீர் வடிகால்களையும் அடைத்துக்கொள்வதுடன், சுற்றுச்சூழலை மாசுபடுத்தி , சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துகின்றது. ஏனவே பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.
இதனால், பொதுமக்கள் வேண்டுகோளின்படி மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளையும் பிளாஸ்டிக் இல்லாத தூய்மையான நகராக பராமரித்திட குப்பைகளை திறந்தவெளியில் கொட்டாமல் வீடுகளில் குப்பை வாங்கும் வண்டிகளில் மட்டுமே கொடுக்கவேண்டும் என தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் நகர் நல அலுவலர் மரு.எம்.யாழினி, உதவி ஆணையர் கமலகண்ணன், சுகாதார அலுவலர்கள்,சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.