Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம். வெல்லமண்டி நடராஜன் அறிக்கை.

0

https://trichyxpress.com/

திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழக செயலாளர் வெல்லமண்டி நடராஜன், சுற்றுலாத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கழக நிரந்தரப் பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் ஆசியுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், கழக ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் ஆணைக்கிணங்க எம்.ஜி.ஆரின் 104-ம் பிறந்த தின விழாவை முன்னிட்டு

நாளை (19.01.2021) செவ்வாய் கிழமை மாலை 6.00 மணி அளவில் திருச்சி, உறையூர் குறத்தெருவில் மாபெரும் பொதுக்கூட்டம் மாநகர் மாவட்ட கழகம் சார்பாக நடைபெற உள்ளது. இந்த பொதுக் கூட்டத்திற்கு உறையூர் பகுதி கழக செயலாளர் பூபதி (எ) பூபேந்திரன் தலைமை வகிக்கிறார்.

திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன், முன்னாள் அமைச்சர், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பேராசிரியர்.க.பொன்னுசாமி, முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன், தலைமை கழக பேச்சாளர்கள் கோவை புரட்சித்தம்பி, நல்லாற்று நடராஜன், கே.பி. மணிவாசகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

அதுசமயம் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் கழக நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி கழக வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், மாண்புமிகு அம்மா பேரவை, எம்.ஜி.ஆர், இளைஞர் அணி மகளிர் அணி. மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி. அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை பிரிவினை சேர்ந்தவர்கள் வர்த்தக தலைவர்கள் முன்னாள் உள்ளாட்சி தலைவர்கள், இயக்குநர்கள் சேர்ந்தவர்கள் அணி தலைவர்கள் , கழக கலை தகவல் பிரிவு தொழில்நுட்ப முன்னாள் கோட்டத் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பேச்சாளர்கள், செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்

என திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழக செயலாளர் வெல்லமண்டி நடராஜன், சுற்றுலாத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.