வீரசைவ பண்டாரத்தார் உட்பிரிவுகளை ஒன்றிணைத்து வீர சைவர் என ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு மாநில வீரசைவ பேரவையின் ஆலோசனைக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் நாகரெத்தினம் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் அமிர்தலிங்கம், தெய்வீகன், மாநில பொதுச் செயலாளர் பாலாஜி லோகநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் வீரசைவ பண்டாரத்தார் உட்பிரிவுகளை ஒன்றிணைத்து வீர சைவர் என ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். அதனை எம்பிசி பிரிவில் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாநில இணை செயலாளர் கணேசன் வரவேற்றார். முடிவில் மாநில பொருளாளர் விவேகானந்தர் நன்றி கூறினார்.