தொடர் மழையினால் மூழ்கிய நெற்பயிர்களை பார்வையிட்ட திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான . அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் , துவாக்குடி, அசூர், தேனீர்பட்டி, சூரியூர், கும்பக்குடி, பழங்கனங்குடி, நவல்பட்டு, சோழமாதேவி,கீழக்குறிச்சி ஆகிய கிராமங்களில் மழையின் காரணமாக விளைந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததை அறிந்த திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி
நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறியதுடன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என முன்னரே வலியுறுத்தியுள்ளதை விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார்.
பெய்து வரும் கனமழையால் வயல்களில் மழை நீர் தேங்கி நெற்பயிர்கள் வீணாகி உள்ளது,
இதனை அரசு அதிகாரிகள் யாரும் பார்வையிடவில்லை எனவும் உடனடியாக அதிகாரிகள் கணக்கீடு செய்து இழப்பீட்டுத் தொகையை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் எனவும்,
ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கையை சட்டமன்ற உறுப்பினரிடம் விடுத்தனர்.
இந்நிகழ்வின் போது துவாக்குடி நகர செயலாளர் காயம்பூ, ஒன்றிய செயலாளர் , மாரியப்பன்,
நவல்பட்டு சண்முகம், கங்காதரன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.