திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமான முறையில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.
இந்தாண்டு நாளை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு இந்த நிலையில் கடந்த 1 2ஆம் தேதி வரை மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க இல்லை.
பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்
திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பெரிதும் முயற்சி எடுத்து தமிழக முதல்வரிடமும், மாவட்ட நிர்வாகத்தினரிடம் பேசி அரசனை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
நேற்று பிற்பகல் சூரியூர் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது.
இதனால் சூரியூர் கிராம மக்களும், ஜல்லிக்கட்டு குழுவினரும், ஜல்லிக்கட்டு வீரர்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பாரம்பரியமான இந்த ஜல்லிக்கட்டு விழா நடைபெற பெரிதும் வைத்து செய்து அனுமதி வாங்கித் தந்த புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ப.குமாரை கட்சி, மத பேதமின்றி அனைவரும் பாராட்டி வருகின்றனர்.