Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தினர் திருச்சி கலெக்டரிடம் மனு.

0

*உடல் ஊனமுற்றோர்களுக்கு மாதாந்திர உதவி தொகை கூடுதலாக ரூ 5000 வழங்க வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கோரிக்கை !

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில பொது செயலாளர் எஸ்.ஷாஜகான் தலைமையில் மனு கொடுக்கபட்டது இவ்மனுவில் கூறியிருப்பதாவது .

1) தமிழக முழுவதும் உள்ள சோதனைச்சாவடிகள் , பத்திரப்பதிவு , மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலங்களில் லஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது . இதனால் பொது மக்கள் பெரும் அளவில் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே லஞ்சத்தை ஓழிக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நிரந்தர பணியிலிருந்து நீக்கம் செய்யுமாறு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக கேட்டு கொள்கிறோம்.

2) உடல் ஊனமுற்றவர்கள் நலம் பெரும் வகையில் 70% விழுக்காடு பாதிக்கபட்ட அவர்களுக்கு மாதாந்திரம் உதவி தொகை கூடுதலாக ரூ 5000 வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை பெருக்கிட நடவடிக்கை எடுக்குமாறு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக கேட்டு கொள்கிறோம்.

3 ) சமையல் எரிவாயு விலையேற்றத்தால் நடுத்தர குடும்பத்தினர்கள் அதிக பாதிப்புகுள்ளாகி மனஉலைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். ஆகவே மத்திய அரசு சமையல் எரிவாயு விலையேற்றத்தை குறைத்து நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு விலையை நிர்ணயம் செய்யும் படி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக கேட்டு கொள்கிறோம்.

4) தமிழகம் முழுவது உள்ள சாலைகளில் ஆடு, மாடு, போன்ற கால்நடைகள் இரவு நேரங்களில் சாலைகளில் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளன. ஆகவே கால் நடைகளால் ஏற்படும் விபத்தினை தடுக்கும் வகையில் சாலைகளில் கால் நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் உயிரிழந்தால் கால் நடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பிடு தொகையை உயிரிழப்புக்கு காரணமான கால்நடைகளின் உரிமையாளர்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக கேட்டு கொள்கிறோம். என்று அவ்மனுவில் கூறியுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.