திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் ஜாய் லேடிஸ் சலூன் மற்றும் செலிபிரிட்டி மேக்கப் ஸ்டுடியோ தொடக்கம்.
நல்லி சில்க்ஸ் மாடியில் உள்ள இந்த அழகு நிலையத்தை திருச்சி கார்த்திக் சித்த வைத்தியசாலை டாக்டர்.கே.எஸ். சுப்பையா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திறப்புவிழா நிகழ்ச்சியில் அதிமுக மகளிர் அணி மாவட்ட செயலாளர் டாக்டர் தமிழரசி சுப்பையா, மதுரம் மருத்துவமனை இயக்குனர் ஐவன் மதுரம், சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர்.ஷர்மிலி மதுரம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
ஜோசப் கண் மருத்துவமனை சிற்றம்பலம், ஆயர் டேவிட் பரமானந்தம், வழக்கறிஞர் C.B. ரமேஷ், UKR எஸ்.எஸ்.ரஞ்சித் குமார், ஜே கே சி அறக்கட்டளை கௌரவத் தலைவர் பேராசிரியர் ரவிசேகர் மற்றும் ஏராளமானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் இதன் உரிமையாளர் J.ஜாய் எஸ்தர் நன்றி கூறினார்.