சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள்
கூலிஉயர்வு கேட்டு வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம்.
திருச்சி காந்திமார்க்கெட்டில் உள்ள லாரி புக்கிங் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு வழங்கப்படும்.
அதன்படி இ;ந்தாண்டிற்கான கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஜனவரி 1-ந்தேதி முதல் கூலி உயர்வு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் இந்தாண்டு பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வு தர லாரி புக்கிங் முதலாளிகள் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து சிஐடியு லாரி புக்கிங் சுமைப்பணி தொழிலாளர்கள் கடந்த 31-ந்தேதி வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.
இதில் போலீசார் தலையிட்டு வரும் 4-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.
ஆனால் 4ந்தேதி லாரிபுக்கிங் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டனர்.
இதனை தொடர்ந்து சிஐடியு லாரி புக்கிங் சுமைப்பணி தொழிலாளர்கள் காந்திமார்க்கெட்டில் உள்ள காந்திசிலை அருகில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு லாரி புக்கிங் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிபிஎம் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாநகர தலைவர் ராமர் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் திருநாவுக்கரசு, சங்க பொருளாளர் பாண்டிதுரை உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.