Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 10,622 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் வழங்கப்பட்டது.

0

திருச்சியில் 2020 – 21 ஆம்கல்வி ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகளை பத்தாயிரத்து 622 மாணவ-மாணவிகளுக்கு கோடியே 18 லட்சத்து 11,000 ரூபாய் மதிப்பில் அமைச்சர்கள் இன்று வழங்கினார்கள்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பள்ளிகளில் பயிலக்கூடிய பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மடிக்கணினி கொடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார் அதன் தொடர்ச்சியாக அந்த திட்டத்தின் கீழ் கடந்த 2020 – 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் நடைபெற்றது.

இவ்விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அமைச்சர் வளர்மதி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயில கூடிய பதினோராம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மொத்தம் 24 ஆயிரத்து 587 பேருக்கு,
9 கோடியே 68 லட்சத்து 87 ஆயிரத்து 817 ரூபாய் மதிப்பில் விலையில்லா மிதிவண்டி வழங்க திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக முதல் கட்டமாக திருச்சி கிழக்கு மேற்கு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாணவர்கள் 3284 பேருக்கும்,மாணவிகள் 4719 பேருக்கும், என மொத்தம் 8003 பேண்டு 3 கோடியே 14 லட்சத்து 97 ஆயிரத்து 271 மதிப்பிலும்,

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மாணவர்கள் 1109 பேருக்கும் மாணவிகள் 1510 பேருக்கும் என மொத்தம் 2619 பேருக்கு 1 கோடியே 3 லட்சத்து 8 ஆயிரத்து 797 ரூபாய் மதிப்பில் இன்று மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

இன்று முதல் துவங்கிய இந்த திட்டம் இரண்டு மூன்று கட்டங்களாக பிரித்து திருச்சி மாவட்டத்தில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி கொடுத்த முடிக்கப்படும் என்றும், தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மாணவ மாணவிகளுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி முடிக்கப்படும் அரசு அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவில் ஆவின் தலைவர் கார்த்திகேயன், அமராவதி கூட்டுறவு சங்க தலைவர் ஏர்போர்ட் விஜி, அவைத் தலைவர் அய்யப்பன், இணைச் செயலாளர் ஜாக்குலின், பொருளாளர் மனோகரன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், மகளிரணி தமிழரசி சுப்பையா, பாசறை செயலாளர் இலியாஸ், கலைப்பிரிவு செயலாளர் அழகரசன் விஜய், மீனவர் அணி அப்பாஸ்,பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா, ஞானசேகர், நாகநாதர் பாண்டி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, ஜவஹர்லால் நேரு, பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் சுப்பையா. மல்லிகா செல்வராஜ்,வக்கீல்கள் கங்கைச் செல்வன், சுரேஷ், ராஜா, காசிப்பாளையம் சுரேஷ், நவசக்தி சண்முகம், லயன் கார்த்திகேயன், கதிர்வேல், அகிலாண்டேஸ்வரி, செந்தில்நாதன், வெல்கம் மாணிக்கம், என்.டி.மலையப்பன், பொன். அகிலாண்டம், சந்திரன், கட்பீஸ் ரமேஷ், பாபு, . மகாலெட்சுமி மலையப்பன், அக்தர் பெருமாள், வக்கீல் ஜெயஸ்ரீ, ராஜலட்சுமி, செந்தண்ணீர்புரம் கணேசன், கே.சி.மோகன், ராஜலட்சுமி, சந்திரசேகர், பிரகதீஷ், சந்து கடை சந்துரு, ஆட்டோ ரஜினி, காஜாப்பேட்டை சரவணன், ரமணிலால், மார்க்கெட் பகுதி பாண்டியராஜன், சிராஜுதீன்.ஹசின் ரியாஸ், வனிதா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டக் கல்வி அலுவலர் பாரதி விவேகானந்தன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.