Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன் – 04.12.2020

இன்றைய ராசிப்பலன் - 04.12.2020

0

இன்றைய ராசிப்பலன் – 04.12.2020

https://trichyxpress.com/

மேஷம்

உங்களின் ராசிக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தேவையில்லாத கடன்களை சமாளிக்க கடன் வாங்க கூடும்.தொழிலில் மேலதிகாரிகள் நெருக்கடியாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாக வாய்ப்பு இருக்கு. நண்பர்களின் ஆலோசனை நல்ல பலனைக் கொடுக்கும். பணவரவு சீராக இருக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு உறவினர்களிடம் தேவையில்லாத மனக்கசப்பு உண்டாகும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சனை இருக்கும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்பு உண்டாகும்.தொழிலில் சிறுசிறு மாறுதல் செய்வதனால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குழந்தைகள் மூலம் சுப செய்தி இருக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு தொழில் கொடுக்கல் வாங்கல் திருப்தியை தரும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் விலகும். வீட்டில் இருந்த பிரச்சினை சுமூகமாக முடியும். உற்றார் உறவினர்களின் உதவி உண்டாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு வரவைக் காட்டிலும் செலவு அதிகமாக காணப்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். தொழிலில் எதிர்பாராத பிரச்சனைகள் இருக்கும்.உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் உத்தியோகத்தில் முன்னேற்றம் கிடைக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

கன்னி

உங்களின் ராசிக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி உண்டாகும். தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அனுகூல பலன் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு வீட்டில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்களிடம் இருந்த மகிழ்ச்சி தரும் செய்தி உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.உத்தியோகத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக இருந்தால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

விருச்சிகம்

உங்கள் இராசிக்கு வீட்டில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகள் தீரும். சிலருக்கு வண்டி வாகனங்களால் விரயம் உண்டாகும். உத்யோ கத்தில் இருந்து எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் அதிகரிக்கும். திடீர் பணவரவு அமையும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.

தனுசு

உங்களின் ராசிக்கு செய்யும் செயல்களில் தாமத நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதை உண்டாகும். சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் எதிலும் நிதானம் வேண்டும்.தொழிலில் சக ஊழியர்களிடம் ஒற்றுமையாக நடந்தால் பிரச்சனைகள் தீரும்.

மகரம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்க ஆர்வம் கூடும். பெரியவர்களின் நட்பு மனதிற்கு தெம்பு அளிக்கும். நண்பர்கள் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு செல்லும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு அதிகாலையிலேயே ஆனந்தமான செய்தி இருக்கும். சுபகாரியம் அனுகூலப் பலனை கொடுக்கும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும். உத்தியோகம் தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சுமாராக தான் இருக்கும். பெரியவர்களுடன் மனஸ்தாபம் இருக்கும். வீட்டில் தேவையில்லாத வாக்கு வாதம் தவிர்த்தால் ஒற்றுமை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூல பலனை அடைய முடியும்.

Leave A Reply

Your email address will not be published.