இன்றைய ராசிப்பலன் – 26.12.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு வீட்டில் திடீர் பணவரவு இருக்கும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல நிகழ்வுகள் நடக்கும். உத்தியோகத் தில் வேலையாட்கள் பொறுப்பாக இருப்பார்கள். கடன் தொல்லை தீரும். பழைய பாக்கி அனைத்தும் வசூலாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சியில் சில தடை இருக்கும். நண்பர்களுடன் மனக்கசப்பு உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பாராத லாபம் உண்டாகும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு பணிகளை திறம்பட செய்வீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடு அகலும். நண்பர்களின் உதவி மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். ஆடம்பரப் பொருட்களை வாங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானம் இரட்டிப்பாகும்.
கடகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சுப காரிய வெற்றியை கொடுக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் இருக்கும். உத்யோக ரீதியில் பொருளாதாரம் சீராக இருக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு உறவினர்களால் மன கஷ்டம் இருக்கும். உடல் நிலையில் கவனம் வேண்டும். வீட்டில் அமைதி குறையும். உத்யோகத்தில் எதிர்பாராத செலவு இருந்தாலும் எதையும் சமாளிப்பீர்கள்.தொழிலில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் வேலைப் பளு நீங்கும்.
கன்னி
உங்கள் இராசிக்கு மனக் குழப்பத்துடன் கவலையுடன் இருப்பீர்கள்.உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணத்தை தவிர்க்கவும்.புதிய கத்திரி மேலதிகாரிகளிடம் நிதானமாக இருக்க வேண்டும் இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
துலாம்
உங்களின் ராசிக்கு எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். உத்தியோகத் ரீதியில் வெளியூர் செல்லும் வாய்ப்பு கூடும். வருமானம் இரட்டிப்பாகும். புதிதாக வளர்ச்சிக்காக எடுக்கும் அனைத்தும் நல்ல பலனைக் கொடுக்கும். சுபகாரியத் தடை விலகும். சேமிப்புகள் உயரும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு வியாபாரம் சீராக இருக்கும். திருமண தடைகள் விலகி முன்னேற்றத்தை கொடுக்கும். குழந்தைகளோடு இருந்த கருத்துவேறுபாடு அகலும்.தொழிலில் வேலையில் மதிப்பும் மரியாதையும் கூடும். பண வரவு அமோகமாக இருக்கும்.
தனுசு
உங்களின் ராசிக்கு எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பாராத செலவுகள் இருக்கும். வீட்டில் ஒற்றுமையில் இருக்கும். எதை செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவேண்டும். பொருளாதாரம் சீராக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
மகரம்
உங்கள் இராசிக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். எளிதில் முடிய விஷயம் கூட காலதாமதம் ஆகும்.உத்தியோக ரீதியில் புதிய திட்டங்கள் நிறைவேற தடைகள் ஏற்படும். வீட்டில் பொறுப்பாக இருந்தால் கடன்கள் ஓரளவு குறையும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். வீட்டில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். உறவினர் வழியில் நல்ல செய்திகள் வரும். சுபகாரியங்களில் அனுகூல பலன் உண்டாகும். பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும் மகிழ்ச்சியை தரும்.
மீனம்
உங்களின் ராசிக்கு பேச்சுத் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு இருக்கும். புதிய பொருள் வாங்க ஆர்வம் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவார்கள். உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் இருந்த பிரச்சினைகள் விலகும். வங்கிச் சேமிப்புகள் உயரும்.