திமுக தலைவரின் ஆணைப்படி “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தலைப்பில் மாநிலம் தோறும் கிராம சபை கூட்டம் நடத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்டம் பொன்மலை பகுதி அரியமங்கலம் 7வது வட்டம் சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற கிராம சபை கூட்டம்
தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அறிவுறுத்தலின்படி 7வது வட்ட கழக செயலாளர் தங்கவேல் தலைமையில் மற்றும் சிறப்பு அழைப்பாளராக பகுதி கழக செயலாளர் கொட்டப்பட்டடு இ. தர்மராஜ் கலந்து கொண்டார்.
மேலும் வட்ட கழக செயலாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள் இளைஞரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்,மகளிரணி நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு “அதிமுகவை நிராகரிப்போம்” என்று “கோஷங்களை எழுப்பி”
“துண்டுப் பிரசுரங்களை” வினியோகித்து “கையெழுத்து இயக்கம்” நடத்தி தங்களது எதிர்ப்பை ஏழாவது வட்ட கிராம சபைக்கூட்டம் மூலம் பதிவு செய்தனர்.