துறையூர் வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபடும்
துறையூர் நகர திமு.க செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானம்.
துறையூரில் நகர திமுக.செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் மெடிக்கல் ந. முரளி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்தின், குழு மாவட்ட அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாவிங்கம், இளைஞரணி கிட்டப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வரும் 30-ம் தேதி துறையூர் வரும் மாநில இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட பிரதிகள் மதியழகன், கார்த்திகேயன், துணை செயலாளர்கள் சுதாகர், பிரேம், மற்றும் அனைத்து வார்டு செயலாளர் களும் கலந்து கொண்டனர்