துறையூரில் அறநிலைய துறை இனண ஆணையரை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
துறையூர் நந்திகேஸ்வரர் கோயில் இணை ஆணையர் சுதர்சனின் அராஜபோக்கை கண்டித்து தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் நந்திகேஸ்வரர் கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டத்திற்கு துறையூர் எம்.எல்.ஏ ஸ்டாலின் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி,ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, முத்துச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கோவில் இணை ஆணையரை கண்டித்து கோஷம் எழுப்பினர் .
கூட்டத்தில் மவட்ட ஆதிதிராவிட நல குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், கார்த்திகேயன் நகர துணை செயலாளர்கள் பிரேம், சுதாகர் மற்றும் கழக முன்னணியர், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.