31 வது ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் விழா 2020.
.
நல திட்ட உதவிகள் வழங்கும் விழா (மத நல்லிணக்கம் சமூக ஒற்றுமை – மனித நேயம்)
திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளை I.C.F.பேராயம் திருச்சி வசந்தம் அரிமா சங்கம் மற்றும் B.M.S.பவுண்டேஷன் இணைந்து வழங்கும் 31வது ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் விழா மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆண்டுதோறும் மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமை, மனித நேயம் போற்றும் வகையில் திருச்சி J.K.C.அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வருகிறது.
22.12.2020 மாலை திருச்சி ஜங்ஷன் ஹோட்டல் அருணில் நடைபெற்றது.
விழாவிற்கு J.K.C.அறக்கட்டளை நிறுவனத் தலைவர் பேராயர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் தலைமை தாங்கினார். பவுண்டேஷன் நிறுவனம் பேராசிரியர் C.அருள் வரவேற்றார்.வழக்கறிஞர் C.B.ரமேஷ், கௌரவத் தலைவர் பேராசிரியர் P.ரவிசேகர், பாஸ்டர் A.ராஜன் ஆடிட்டர் M.ரிச்சர்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் K.S.சுப்பையா, திருச்சி வசந்தம் அரிமா சங்கம் மாவட்ட தலைவர் லயன் Dr. T.G.R.வசந்தகுமார், மதுரம் மருத்துவமனை Dr. ஐவன் கிறிஸ்டோபர், மதுரம், Dr. S.மணிமொழி இளங்கோ, சென்னை, பேராசிரியர் M.சந்திசேகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றி நல திட்ட உதவிகள், சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
முன்னால் தாசில்தார் K.S.அப்துல் அஜீஸ், ஆடிட்டர் B.வீரமணி, -U.K.R.புரமோட்டர் மேனேஜிங் டைரக்டர் S.S.ரஞ்சித்குமார், ஜோசப் கண் மருத்துவமனை சிற்றாலய ஆயர் S.டேவிட் பரமானந்தம் Rev இம்மானுவேல், S.ராஜலிங்கம், பொன்செல்வி N.M.சலாவுதீன் ஆசிரியர் M.அலெக்சாண்டர், ரவி மதன், கமல், ஆனந்தராஜ் சந்தானகிருஷ்ணன் சகுந்தலா ஆகியோர் கலந்து கொண்டனர். J.மனோகரி நன்றி கூறினார்.