Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி. மின்கம்பம் உடனடியாக சரி செய்யப்பட்டது.

0

திருச்சி எக்ஸ்பிரஸ் மின்னிதழ் செய்தி எதிரொலி. எடமலைப்பட்டி புதூரில் உள்ள மின் கம்பம் உடனடியாக சரி செய்யப்பட்டது.

 

https://trichyxpress.com/

நேற்று மாலை நமது திருச்சி எக்ஸ்பிரஸ் மின்னிதழில்

திருச்சி எடமலைப்பட்டி புதூர், (40வது வார்டு) நல்ல தண்ணீர் கேணி தெரு, தங்க ராஜா தியேட்டர் எதிர்புறம் உள்ள மின் கம்பம் (TCC.No 50/4/53) அடி பாகம் முழுவதும் செல்லரித்து இப்போ அப்போ சரிந்து விழும் நிலையில் உள்ளது எனவும்

பொது மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடத்தில் உள்ள இந்த மின்கம்பத்தை மாநகராட்சி நிர்வாகம் உயிர்பலி ஏற்படும் முன் மாற்றப்பட வேண்டும் என்பது அப்பகுதி பொது மக்களின் விருப்பம் என செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இதனையடுத்து இன்று மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக மின்கம்பத்தின் அடிபாகம் சிமெண்ட் கலவையால் பூசி தற்காலிகமாக சரி செய்து உள்ளனர்.

இதனையடுத்து நல்லதண்ணீர் கேணி பகுதி பொதுமக்கள் நமது திருச்சி எக்ஸ்பிரஸ் மின் இதழுக்கும், மாநகராட்சிக்கும் நன்றி தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.