Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விதவிதமான கீரைகளை வைத்து கீரை வடை செய்வது எப்படி ?

0

கீரைகள் பல விதமான ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ளன. இந்த பதிவில் கீரைகளை வைத்து சுவையான கீரை வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் – 2,
முளைக்கீரை, பசலைக் கீரை – தலா ஒரு கப்,
வெங்காயம் – 2
பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

*செய்முறை*

கீரை, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கடலைப்பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கீரை, வெங்காயம், பெருஞ்சீரகம் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மாவில் தண்ணீர் சேர்க்கக்கூடாது.

கடாயை அடுப்பில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான கீரை வடை ரெடி.

Leave A Reply

Your email address will not be published.