Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பெருமாள் கோவிலில் உள்ள 2 தூண்களை காணவில்லை. மீட்க இந்துக்கள் கோரிக்கை.

0

*2 தூண்களை காணவில்லை: கன்னியாகுமரி கோவிலில் பரபரப்பு!*

கடந்த சில ஆண்டுகளாக சிலை கடத்தல் வழக்குகள் பரபரப்பாக விசாரணை செய்யப்பட்டது என்பதும் தமிழக கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட பல சிலைகள் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்டு மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது என்பதும் தெரிந்ததே
கலைநயமிக்க தமிழகத்தில் உள்ள சிலைகள் அதிக விலைக்கு வெளிநாட்டில் விலை போவதால் சமூக விரோதிகள் பலர் சிலைகளை கடத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிலைகளை மட்டும் கடத்தி வந்த அவர்கள் தற்போது கோவிலில் உள்ள தூண்களையும் கடத்தத் தொடங்கி விட்டார்கள் போல் தெரிகிறது,

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கலைநயமிக்க 222 தூண்கள் இருந்ததாகவும் அந்த தூண்களில் இரண்டு தூண்கள் திடீரென காணாமல் போயுள்ளதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஒரு கோவிலில் இருந்து சிலைகளை கடத்துவது என்பது வேண்டுமானால் எளிதாக இருக்கலாம் ஆனால் ஒரு துணையை கடத்தியது எப்படி?
தூண்களை கடத்தும் வரை அங்கிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.

இது குறித்து தீவிர விசாரணை செய்து மீண்டும் தூண்களை மீட்க வேண்டும் என்றும் அந்த பகுதியில் உள்ள இந்துக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.