திருச்சி மாநகரில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாநகரின் மத்திய பேருந்து நிலையம், பாலக்கரை, உறையூர், சத்திரம் பேருந்து நிலையம், சுப்புரமணியாரம், ஏ.புதூர், உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதற்கிடையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து மேடு பள்ளமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையில் பயணித்து வருகின்றனர்.

இந்த சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகள் ஆங்காங்கே பெயர்ந்து இது இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்கின்றனர்.
பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதாலும் நோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர் உதவியாக தண்ணீரை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் தூக்கி சுற்றுவட்டாரப் பகுதியான மணப்பாறை, மணச்சநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர் ,லால்குடி, துவரங்குறிச்சி, துறையூர் முசிறி மற்றும் பெட்டவாய்த்தலை ஆகிய பகுதிகளிலும் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.