திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் அறிக்கை: ஆலோசனைக் கூட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டுகோள்.
தமிழக அமைச்சரும் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
நம் நெஞ்சங்களில் வாழும் இதயதெய்வம் மறைந்த தமிழக மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில் மாண்புமிகு தமிழக முதல்வர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிச்சாமி மற்றும் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் 0. பன்னீர்செல்வம், கழக ஒருங்கிணைப்பாளர் அவர்களின் ஆனைக்கிணங்க
வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் 19.12.2020ம். தேதி சனிக்கிழமை மன்னார்புரம் அருகிலுள்ள V.S. மஹாலில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெல்லமண்டி N. நடராஜன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளரும், திருச்சி மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் சிறப்புரையாற்றவுள்ளார்கள்.
அதுசமயம் நிர்வாகிகள், முன்னாள் அமைப்பர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட கழக, பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் திரளாக
கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன் மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.