மீண்டும் அதிமுக அரசு வெற்றி பெற பாடுபட வேண்டும், அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு.
தமிழ்நாடு அக்குபஞ்சர் அண்ட் ஆய்வு கவுன்சில் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
கவுன்சில் தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார்.டாக்டர். ஜான் ராஜ்குமார், டாக்டர். அபூபக்கர் சித்திக், டாக்டர். பாலமுருகன் வெங்கடேஷ் கணேசன்,சார்லஸ் மேரி, சகாயமேரி, சகுந்தலா, நாக பாண்டியன், பொன்னழகு,முன்னவர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அண்ணா திமுக கூட்டணி வெற்றி பெற டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் அரசு மீண்டும் அமைய தமிழகம் முழுவதும் உள்ள 2 லட்சம் அக்குப்பஞ்சர் மருத்துவர்கள் பாடுபடுவார்கள் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தமிழகம் முழுவதும் தொடங்கப்படவுள்ள மினி கிளினிக் பணிபுரிய அக்குபஞ்சர் மருத்துவர்கள் ஊதியமின்றி பணிபுரிய தயாராக உள்ளனர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் நோய்க்கு சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து வரும் அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நோயிலிருந்து விடுபட அக்குபஞ்சர் மருத்துவத்தில் சிறந்த புள்ளிகள் உள்ளன, அக்குபஞ்சர் மருத்துவத்தை ஒருநாள் நோய்களிலிருந்து விடுபட அரசு அக்குபஞ்சர் மருத்துவத்தை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது
மேலும் தகுதி அடிப்படையில் அக்குபஞ்சர் மருத்துவம் அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
முடிவில் அக்குபஞ்சர் கவுன்சில் செயலாளர் டாக்டர் விஜய் கார்த்திக் நன்றி கூறினார்