Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுகவின் தேர்தல் அறிக்கையால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

0

திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்ட பிறகே காவிரி உபரி நீரை பொன்னணியாறு அணைக்கு நீரேற்றம் செய்யும் திட்ட ஆய்வுப் பணிக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியதாக திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொன்னனியாறு அணை 1975 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மழை இல்லாத காரணத்தால் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் பாசனமின்றி வேளாண்மை நிலங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் வெள்ளகாலங்களில் காவிரியில் உபரியாக செல்லும் நீரை மாயனூர் கதவணையிலிருந்து பொன்னனியாறு அணைக்கு நீரேற்றம்ம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த வாரம் திருச்சியில் நடந்த தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடமம் இப்பகுதி விவசாயிகள் இத்திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பொன்னணியாறு அணைக்கு காவிரி உபரி நீரை நீரேற்றம் செய்யும் திட்டப்பணி ஆய்வுக்காக தமிழக அரசு ரூபாய் 40 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளதாக 8 ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் இன்று அணையைப் பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விவசாயிகளிடம் பேசி அவர்களது கோரிக்கையை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் இத்திட்டம் சேர்க்கப்பட்ட பின்னரே தமிழக அரசு திட்ட ஆய்வு பணிக்கு நிதி ஒதுக்கியதாக தெரிவித்த அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது திமுக தேர்தல் அறிக்கையால் விழித்துக்கொண்டு இத்திட்ட ஆய்வு பணிக்கு நிதி ஒதுக்கி அறிவிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.

தற்போதைய ஆட்சியில் இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் விடப்பட்டாலும் 2021 அமையப்போகும் திமுக ஆட்சியில் இத்திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் உறுதியளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.