நடிகர் ரஜினிகாந்த் தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியின் பெயரை மக்கள் சேவை கட்சி என்று பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நீண்ட காலத்திற்கு பிறகு வரும் 31ஆம் தேதி ரஜினிகாந்த் கட்சியின் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். தொடங்கப்போகும் கட்சிக்கான அறிமுக மாநாடு எங்கு நடைபெற இருக்கிறது என ரஜினிகாந்த் அறிவிக்க உள்ளார்.
இதனால் தமிழக அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி தொடங்குவதற்கான வேலைகளை டெல்லியில் ரஜினிகாந்த் துரிதமாக செய்து வருவதாக ஏற்கனவே கூறப்பட்டது.
தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தியும், மேற்பார்வையாளர் தமிழுருவி மணியனும் கட்சிக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது கட்சியின் பெயரை மக்கள் சேவை கட்சி என்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் பாபா முத்திரையை சின்னமாக கேட்டார் என்றும், ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே அனைத்து தொகுதிகளிலும் ஆட்டோ சின்னத்தில் ரஜினிகாந்த் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.