விஜயகாந்த் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
விஜயகாந்த் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை.
தமிழக சட்டசபை பொதுத்தேர்தலை சந்திக்க ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.வும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக அளித்த பேட்டியில், ‘அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. உள்ளது என்றும், ஆனாலும் தேர்தல் கூட்டணி குறித்து கட்சித்தலைவர் விஜயகாந்த்தான் முடிவு எடுப்பார் என்றும்’ கூறி வருகிறார். தனித்து போட்டியிடும் அளவுக்கு தே.மு.தி.க. வலுவாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்தநிலையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் இன்று (ஞாயிறு) காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பங்கேற்கிறார். இதில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்களை பற்றி ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.