இனி தினமும் மீன் வாங்கும் போது சில குறிப்புகளைப் பார்த்து வாங்குங்கள் அப்போதுதான் அது நல்ல மீனா என்பது தெரியும்.
நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உள்ள நன்மைகள் என்னவென்று அறிந்து அதனை உண்ண வேண்டும். அவ்வாறு உண்ணும் உணவுகளில் அசைவ உணவுகள் உடலுக்கு வலு சேர்க்கின்றன.
அதிலும் முக்கியமாக மீன் உடலுக்கு மிகவும் நல்லது. மீன் வாங்கும் போது அதனை பார்த்து வாங்க வேண்டும். மீன்களின் முள் அதிகமாக இருந்தால் சுவையும் அதிகமாக இருக்கும். சிறிய மீன்களின் சுவை அதிகம். மீனின் கண்கள் வெளியே புடைத்தவாறு, பளபளப்பாக இருந்தால் அது புதிய மீன். செதில்களில் புள்ளிகள் மற்றும் அடுக்குகள் இருக்கக் கூடாது.
செவுள் பகுதி மங்கிய அல்லது பழுப்பு நிறத்தில் இருந்தால் அது பழைய மீன். சதைப் பகுதியில் விரிசல், கொழ கொழப்பு இருந்தால், அழுகிய முட்டை நாற்றம் வந்தால், அது கெட்டுப் போன மீன்
ஐஸ்சில் நீண்ட நேரம் வைக்கப்பட்டால் மேல்தோல் உடைந்து, வயிறு வீங்கி, ஓரங்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும். அதனால் இனி மீன் வாங்கும் போது இவை அனைத்தையும் கவனித்து வாங்குங்கள்.