மணிகண்டம் ஒன்றியத்தில் ஊரக புத்தாக்கத் திட்ட கூட்டம்.
மணிகண்டம் ஒன்றியத்தில் ஊரக புத்தாக்கத் திட்ட கூட்டம்.
தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டதின் கீழ் மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் மக்கள் பங்கேற்புவுடன் கூடிய வளர்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டு கிராம முதலீட்டுத் திட்டம், ஊர்க்கூட்டம் மூலம் ஒப்புதல் பெறுவதற்கு கூட்டம் நடைப்பெற்றது.
ஊராட்சி பகுதிகளில் எடுக்கப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதத்ற்கான திட்டங்கள்.
உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள் அமைப்பதற்கு உள்ள வாய்ப்புகள் குறித்து திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. வட்டார அணித்தலைவர் சம்பத்குமார் திட்ட விளக்க உரையாற்றினார்.
ஊராட்சி மன்றத் தலைவர் ஜார்ஸ் பெர்னாட்டஸ், துணைத்தலைவர் கலையரசன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுபாஷினி சண்முகம், டெல்பின் டேவிட், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், இளைஞர்கள், உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு கொரோனா சிறப்பு நிதியின் மூலம் மான்யமாக பெறப்பட்ட ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்தைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட விவசாய வேளாண் உபகரணங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது .
நிறைவாக திட்ட செயலர் நாகஜோதி நன்றியுரை கூறினார்.