எடமலைப்பட்டிபுதூர் மழை நீர், சேரும் சகதியுமாக உள்ளது. கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்
எடமலைப்பட்டிபுதூர் மழை நீர், சேரும் சகதியுமாக உள்ளது. கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அரசு பள்ளி துழைவுவாயில் பகுதியில் பல நாட்களாக சேரும் சகதியுமாய் இருக்கிறது.
காளியம்மன் கோவில் தெருவில் சுமார் 50 பீட்டர் தொலைவிற்க்கு சகதியுமாக உள்ளது.
இதனால் அந்த பகுதி மக்கள் போக்குவரத்துக்கு பெரிய இடையுறாக உள்ளது. சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் வழுக்கி விழும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உட்பட்டு வருகின்றனர்.
இதேபோன்று எடமலைப்பட்டி புதூர் அரசு காலனி, ராமச்சந்திர நகர் கிருஷ்ணவேணி நகர், ஹெல்த் காலனி ஆகிய பகுதிகளில் மழை நீரால் நோய் பரவும் சூழ்நிலை உள்ளது என அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு இத்தகவல் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.