சின்னத்திரை சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை. அதிர்ச்சியில் ரசிகர்கள்.
சின்னத்திரை சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை. அதிர்ச்சியில் ரசிகர்கள்.
சித்து என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருகிறது.
சென்னை திருவான்மியூரில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த சித்ரா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாக வாழ்க்கையில் உயர்ந்து சமீபத்தில்தான் சொந்த வீடு கட்டினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துக்கொண்டும், விளம்பர படங்களிலும் நடித்து வந்தார்.
நடனத்தில் திறமை கொண்ட சித்ரா, விஜய் டிவியில் டான்ஸ் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.
சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து, வரும் ஜனவரி மாதம் திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில், சென்னை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
சித்ரா, திருமணம் செய்துகொள்ள இருந்த ஹோம்நாத்தும் ஓட்டலில் தங்கி இருந்ததாக கூறப்படுவதால், சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் எழுந்திருக்கிறது.
போலீசாரின் விசாரணையில் அந்த மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழும் என்று தெரிகிறது.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சித்ரா, 29 வயதிலேயே திறமையாலும் உழைப்பாலும் உயர்ந்த தற்கொலை செய்துகொண்டிருப்பது சின்னத்திரை வட்டாரத்ததினர் அழ்ந்த வருத்தத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.