திருச்சி திருவெறும்பூர் தேமுதிக புதிய நிர்வாகிகள் பட்டியல். விஜயகாந்த் அறிவிப்பு
திருச்சி திருவெறும்பூர் தேமுதிக புதிய நிர்வாகிகள் பட்டியல். விஜயகாந்த் அறிவிப்பு
திருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய
தே.மு.தி.க. நிர்வாகிகள் மாற்றம்.
திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் ஒன்றிய நிர்வாகிகளை மாற்றி புதிய நிர்வாகிகள் பட்டியலை தே மு தி க தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
திருச்சி மாநகர் மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றிய கழகத்தில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.
இதில் தெற்கு ஒன்றிய செயலாளராக பரமசிவம், அவைத்தலைவராக துரை அழகர், பொருளாளராக தங்கம், துணை செயலாளர்களாக நடராஜன், வைத்தியநாதன், நெப்போலியன், நாகலட்சுமி,
மாவட்ட பிரதிநிதிகளாக ஜோசப், கிருஷ்ணமூர்த்தி, சித்திரை மூர்த்தி, ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் திருச்சி வடக்கு ஒன்றிய செயலாளராக மாரீசன், அவைத்தலைவராக ஆறுமுகம், பொருளாளராக ராஜ்குமார், துணை செயலாளர்களாக அன்பழகன், நாகராஜ், பாஸ்கர், புவனேஸ்வரி, மாவட்ட பிரதிநிதிகளாக இளையராஜா, ரமேஷ், மற்றொரு ரமேஷ், சந்திரசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் திருவெறும்பூர் தெற்கு வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி கிளை நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் தேமுதிக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் நிர்வாகிகள் ஒன்றுபட்டு உழைத்து திருச்சி மாநகர் மாவட்டத்தில் தேமுதிக வளர்ச்சி அடைந்து சிறப்புடன் செயல்பட அனைவரும் பாடுபட வேண்டும், என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி. கணேசை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.