சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு பாதுகாப்பு: ஆயர்கள் மாநாட்டில் வெல்லமண்டி நடராஜன் பேச்சு .
சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு பாதுகாப்பு: ஆயர்கள் மாநாட்டில் வெல்லமண்டி நடராஜன் பேச்சு .
தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களை பாதுகாத்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சியில் நடைபெற்ற லுத்தரன் திருச்சபை ஆயர்கள் மாநாட்டில் தெரிவித்தார்.
தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆயர்கள் மாநாடு மற்றும் கிறிஸ்துமஸ் கூடுகை நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள தூய திரித்துவ பேராலயத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு, திருச்சியை தலைமையாகக் கொண்ட TELC தரங்கை பேராயர் டேனியேல் ஜெயராஜ் தலைமை வகித்தார்.
மாநாட்டில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து 148 ஆயர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்து கொண்டார்.
இதில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசிய போது …..
மறைந்த தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட என்னை, சட்ட மன்ற உறுப்பினராக்கி, அமைச்சராக உயர்த்திய பெருமை, திருச்சி மாநகர மக்களையும், கிறிஸ்தவ மக்களான உங்களையும் சாரும்.
தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. இது கிறிஸ்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என தெரிவித்தார்.
தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைக்கும், திருச்சபை சார்ந்த மக்களுக்கும் பெரும் உதவி புரிந்து வரும் தமிழக அரசுக்கும், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வது.
திருச்சபை தொடர்பான உதவிகளுக்கும், திருச்சபை சார்ந்த மக்களுக்கு தேவையான உதவிகளை கோரிக்கையாக முன் வைப்பது,
வருகிற 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை, இந்த அரசு மீண்டும் அமைய ஜெபித்தும், ஆசீர்வதித்தும் களப்பணி ஆற்றி, வெற்றி பெறச் செய்வதுஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சிறுபான்மை மக்களுக்கான நலத்திட்டங்களை அரசிடமிருந்து முழுமையாக பெறுவதற்கு உதவி செய்யுமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மாநாட்டில் கலந்துகொண்ட ஆயர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் கேக்குகளை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
திருச்சியை தலைமையிடமாக கொண்ட தமிழ் லுத்தரன் திருச்சபையில் மூன்றரை இலட்சம் குடும்ப உறுப்பினர்கள் உள்ள நிலையில், சராசரியாக 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர், தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது.
அதிமுக வெற்றிக்கு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.